Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வார இறுதி நாட்கள்…அலைமோதும் சுற்றுலா பயணிகள்…ஊட்டியில் கொண்டாட்டம் …!!

 ஊட்டியில் வார இறுதி நாட்களான  சனி மற்றும் ஞாயிறு  ஆகிய இரண்டு நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர் .

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் இருப்பதால் இயற்கை அழகு எப்போதும் குறைந்ததில்லை .அங்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்துள்ளார்கள்.இந்தநிலையில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு   ஆகிய இரண்டு நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது அதுமட்டுமன்றி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு மிகவும் ரசித்துள்ளனர்

பின்னர் பெரணி இல்லம், கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெரணி செடிகள், கள்ளிச்செடிகளை பார்வையிட்டனர். ஊட்டியில் பூத்துக் குலுங்கிய மலர்களுடன் செல்பி ஸ்பாட் முன்பு குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.இது தவிர ஊட்டி படகு ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமதி சீட்டு பெற்றுள்ளனர்.

அதைப்போல்  படகு  இல்லத்துக்கு  கடந்த இரண்டு நாட்களாக 16,335 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் அதாவது சனிக்கிழமை  7ஆயிரத்து835  பேரும்  ஞாயிற்றுகிழமை 8,500 பேரும் வந்துள்ளனர். அதேபோன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் சனி கிழமை  8,200 பேரும் ஞாயற்று கிழமை  10,000 பேரும் என 18,200 சுற்றுலாப்பயணிகள் அங்கு பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு ரசித்துள்ளார்கள் பின்னர்  ரோஜா பூங்கா, படகு இல்லம், தேயிலை பூங்கா ,சூட்டிங் மட்டம் ,பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

Categories

Tech |