ஓட்டுநர் உரிமம் பெறாத வாலிபருடன் சென்ற நண்பன் விபத்தில் உயிரிழந்த சம்பவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் Groubunden பகுதியில் வசிக்கும் 18 வயது வாலிபர் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு அவ்வப்போது வெளியே போய் விடுவாராம். இதனையடுத்து சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் அந்த வாலிபர் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காரை வேகமாக ஓட்டி இருக்கிறார். அதே போல் அதற்கு அடுத்த நாள் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டும்போது எதிர்பாராதவிதமாக டிரன்ஸ்பார்மரில் மோதியுள்ளது. இதில் அவருடன் இருந்த நண்பர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தன்னுடைய கவனக்குறைவால் ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த அந்த வாலிபருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினற்கு இழப்பீடாக 50 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் காரை ஓட்டிய வாலிபர் இதுவரை ஓட்டுனர் உரிமம் தேர்வில் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.