திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியை சேர்ந்த வேம்பு ராஜா கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவர் திடீரென்று நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேம்பு ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வேம்புராஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.