திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஆபத்தானபுரம் அருகே உள்ள அம்பேத்கர் நகரில் நவீன் குமார் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக வடலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நவீன்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.