Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு கொலை மிரட்டல்…. ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் நல்லாபாளையம் அருகே நண்பர்களுடன் சாலை ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே மினி லாரியில் வந்த ரவிக்குமார் என்பவர் கோபுவை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கோபு கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி ரவிக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |