Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபருடன் ஏற்பட்ட தகராறு…. பேருந்து கண்டக்டரை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் பேருந்து கண்டக்டரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கம்மங்காடு பகுதியில் மலையப்பன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனியார் பேருந்து புதுக்கோட்டையில் இருந்து பாச்சிக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் நின்று பயணம் செய்த வாலிபரை மலையப்பன் கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த வாலிபர் ஆலங்குடி வடக்காடு முக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிட்டார். இதனை அடுத்து பாச்சிக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் வைத்து 10 பேர் கொண்ட கும்பல் பேருந்தில் ஏறி மலையப்பனை சரமாரியாக தாக்கிவிட்டு 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |