குஜராத் மாநிலம் பாவ்டி என்ற கிராமத்திற்கு வெளியே எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது அவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட ஜெய்ராஜ் போரிச்சா என்பது தெரியவந்தது.
அதன்பிறகு போலீசார் கிராமத்திற்குச் சென்ற விசாரணை செய்தபோது, திலு மற்றும் அவரது தந்தை தேவ்கா ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி உள்ளனர். அதனால் அவர்கள் மீது சந்தேகம் கொண்ட போலீசார் தீவிர விசாரணை செய்ததில் ஜெயராஜை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். திலுவின் உறவினர் ஒருவரின் மனைவியுடன் ஜெயராஜுக்கு தவறான பழக்கம் இருந்துள்ளது. அந்த உறவை கைவிடும்படி அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் ஜெய்ராஜ் அவரது பேச்சை கேட்காமல் அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனால் அவரை கொல்ல திட்டமிட்டு பண்ணை வீட்டிற்கு வரவழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அந்த பெண்ணுடனான பழக்கத்தை கைவிட முடியாது என்று கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும் ஜெயராஜை கத்தியால் குத்தி கொலை செய்தனர். அதன் பிறகு உடலை எரித்து கிராமத்திற்கு வெளியே உள்ள சாக்கடையில் வீசி அது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.