சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் தலைமலை(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்நிலையில் தலைமலை அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் இருந்த மாணவி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் தலைமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.