Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபரை சுற்றி வளைத்த கும்பல்…. நள்ளிரவில் நடந்த கொடூரம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

முன் விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வண்டிப்பேட்டை குடியிருப்பு காலனியில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக அஜித்குமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் மூர்த்தி, மணி, ஆகாஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மணி, ஆகாஷ், குருமூர்த்தி ஆகிய 3 பேரும் அஜித்குமாரை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அஜித் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித் குமாரை அரிவாளால் வெட்டிய வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |