முன் விரோதம் காரணமாக 7 பேர் வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நடுக்குப்பம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் இரவு நேரத்தில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அஜித் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து படுகாயமடைந்த அஜித் குமாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வினோத்குமார், சலீம், ஆகாஷ், கார்த்திக், தமிழரசன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அஜித்குமார் தினமும் மது போதையில் வந்து எங்களை தாக்கி தன்னை பெரிய ஆள் போல் காட்டிக் கொண்டார். இதனால் முன் விரோதத்தை மனதில் வைத்து அஜித்குமாரை கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.