திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வடக்கு வீதியில் இருக்கும் கடையில் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சாக்கு முட்டைகளை ஏற்றி கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷ்ரவன்குமார்(22) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் வைத்திருந்த சாக்கு முட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் புகையிலை பொருட்கள் மற்றும் 48 ஆயிரத்து 940 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.