வாலிபரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்பழனியில் இருக்கும் கோவிலில் நேற்று முன்தினம் திருவிழாவை முன்னிட்டு புராண நாடகம் நடைபெற்றுள்ளது. அதை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் முருகேசன் என்பவருக்கும், நாகராஜ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நாகராஜுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, ராஜா, வெங்கடேசன், மதன்குமார், சதீஷ்குமார் ஆகிய 5 பேரும் இணைந்து முருகேசனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த முருகேசன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நாகராஜ் உள்பட 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.