முல்லைத்தீவில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்த முயன்றதாக காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் காவல்துறையினர் குடியிருப்பில் மர்ம கும்பல் அதி பயங்கர ஆயுதங்களுடன் வந்து வீட்டினுடைய உரிமையாளரின் மீது மிளகாய்த்தூளை வீசிய பின் அங்கிருந்த வாலிபரின் மீது தாக்குதலை நடத்த முற்பட்டுள்ளனர். அந்த சமயம் அப்பகுதிக்கு வந்த இளைஞர் அச்சம்பவத்தை கண்டு பொதுமக்களை அழைத்துள்ளார். இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி திரண்டு வந்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மர்ம கும்பல் தப்பிச் செல்வதற்கு முற்பட்டனர். அப்போது பொதுமக்கள் இருவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இவர்களை ஏற்றுவதற்காக வந்த கார் ஓட்டுநரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து 3 நபர்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.