Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாலிபர்களை சுற்றி வளைத்த வனத்துறையினர்…. காட்டு பகுதியில் நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனச்சரகம் சந்திரன் ஏரி பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த குப்புராஜ், சந்திரன், மாது, தேவராஜ் ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரித்தபோது அவர்கள் சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த சாக்கு முட்டையில் 16 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்துள்ளது. இதனால் குப்புராஜ், மாது, சந்திரன், தேவராஜ் ஆகிய நான்கு பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நான்கு பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Categories

Tech |