Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் உயிரை காவு வாங்கிய சூதாட்டம்…… போலீஸ் விசாரணை….. சென்னையில் பரபரப்பு….!!

சென்னை கொடுங்கையூரில் சூதாட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் தப்பி ஓட முயன்ற நபர் மாடியில் இருந்து குதித்து உயிர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணமூர்த்தி நகரில் கம்பெனி ஒன்றில் மேல்தளத்தில் அனுமதியின்றி சூதாட்ட விடுதி நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த 15 பேர் தப்பி ஓடிய நிலையில் ஒரு புறம் இருந்த நான்கு பேரை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் தப்பியோடியவர்களில் ஒருவர் அடுத்த கட்டிடத்தில் குதித்த பொழுது மேற்கூரை உடைந்து கீழே விழுந்து இறந்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |