Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… விசாரணையில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் கோவில் பணம் திருடிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள செரி ரோட்டில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் கடந்த ஆண்டு மர்ம நபரால் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோவிலில் திருடியதற்காக கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |