வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீழ்கரணை பகுதியில் வசிப்பவர் தேவபிரசாத்(26). இவர் மறைமலைநகரில் பாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் தேவிபிரசாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளார். அப்போது விஜி என்பவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் தேவபிரசாத்தை கல்லால் அடித்ததோடு மட்டுமல்லாமல் அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த போது அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி சென்றுவிட்டது.
இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து இந்த கொலைக்கான காரணம் என்ன? இதை செய்தவர்கள் யார்? என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே விஜிக்கும், தேவபிரசாத்க்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளதால் அது ஒரு காரணமாக இருக்கலாமா? இல்லை தேவபிரசாத் சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.