Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுப்பட்டி நல்லக்கேணி தெருவில் ராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது இவருக்கு தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராயப்பனுக்கும், அவரது அக்காள் பத்மாவிற்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பத்மாவின் மகனான ராஜ்குமார் மொபட்டில் திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். அப்போது தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி, அவரது நண்பர்கள் அஜித் பாண்டி, சார்லஸ் ஆகியோர் இணைந்து ராஜ்குமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தாமஸ் செல்வம் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தாமஸ் செல்வம் மற்றும் சுரேஷ் அந்தோணி ஆகியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மேலும் சார்லஸ் மற்றும் அஜித் பாண்டி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் இரண்டு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Categories

Tech |