Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே குள்ளவீரன்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசிக்கும் கார்த்தி என்பவருக்கும் கண்ணனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் கண்ணனை பழிவாங்குவதற்காக கார்த்தி தன்னுடைய நண்பர்களான பாலாஜி, பாஸ்கர், ஜெகதீஷ் ஆகியோருடன் சேர்ந்து கண்ணனை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு நடந்தது. இது தொடர்பான வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கொலை குற்றவாளிகளான பாலாஜி, கார்த்தி மற்றும் ஜெகதீஷ் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் வழக்கில் தொடர்புடைய பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |