Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி மங்கம்மாள் சாலையில் லோடு ஆட்டோ ஓட்டுநரான பசுபதி(23) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி பசுபதி இரவு நேரத்தில் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பசுபதியுடன் தகராறு செய்து அவரை அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில்விளை பகுதியை சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளியான கணேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது பசுபதி கணேசனிடம் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் பசுபதி பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் வேலை முடிந்து வந்த பசுபதியிடம் கணேசன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டதால் கணேசன் பசுபதியின் கழுத்தை துண்டால் இறுக்கியும், கல்லால் தாக்கியும் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |