வாலிபர் கொலை வழக்கில் 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது 4 பேர் அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் ராபின் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த 4 பேர் தப்பி சென்றார்கள். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
பின் பிரேத பரிசோதனை முடிந்த பின் ராபினின் உடலை போலீசார் உறவினரிடம் ஒப்படைக்க முயன்ற பொழுது கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டமாக கூறினாகள். இதன் பின் துணை போலீஸ் சூப்பிரண்டு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின் உறவினர்களிடம் நேற்று இரவு உடல் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் கொலையாளிகளை பிடிக்க 5 தனிபடை போலீஸ் அமைக்கப்பட்டது.
இதன்பின் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் செங்குன்றம் அருகே இருக்கும் சோழவரத்தைச் சேர்ந்த கார்த்திக், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன், ராகுல் உள்ளிட்டோர் கொலை செய்தது தெரிந்தது. இவர்கள் ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் தாராட்சி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்று இரவு அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தார்கள். மேலும் அவர்களை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்கள்.