கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தில் ஆறுமுகம்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக ஆறுமுகம் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீபாவிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது ஆறுமுகத்தின் மகளுக்கு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் தனது மகளை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தீபா தனது மகன் மகளுடன் இணைந்து தூங்கி கொண்டிருந்த ஆறுமுகத்தின் கழுத்தை நைலான் கயிற்றால் நெரித்து கொலை செய்து விட்டு இயற்கை மரணம் அடைந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து தீபா மற்றும் அவருடைய மகன், மகளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.