சேலம் மாவட்டத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அல்லிக்குட்டை பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்பதால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.