பண்ருட்டி அருகில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் மாளிகம்பட்டு கிராமப்பகுதியில் வசித்து வருபவர் பச்சையப்பன். இவருடைய மகன் 27 வயதான பாலசுப்ரமணியன். இவர் வீட்டிற்கு பின்னால் இருக்கின்ற முந்திரி மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் காடாம்புலியூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.