கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அங்கு குளுகுளு சீசன் தொடங்கி விட்டதால் நீரார் அணை, கூழாங்கல் ஆறு பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களில் அத்துமீறி நடப்பவர்களை கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Categories