கேரளாவில் பக்கெட் தண்ணீரில் மூழ்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் அடுத்த கடையங்காடு என்ற பகுதியில் கிரீஸ் -அஞ்சலி தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை நேற்று 10 மணி அளவில் உயிரிழந்தது. குழந்தையை தூங்க வைத்துவிட்டு தாய் செலவை செய்து கொண்டிருந்தபோது இந்த பயங்கர விபத்து நடந்தது. குழந்தையின் குரல் கேட்காததால் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அஞ்சலி குளியலறையில் உள்ள பாலியல் குழந்தை கிடந்ததைக் கண்டு பதறிப் போனார்.
அதன் பிறகு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தையின் தந்தை வெளிநாட்டில் உள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.