வாளுடன் நின்று பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் மணிகண்டன்(21) என்பவர் வசித்து வடிக்கிறார். இவர் வ.உ.சி சாலையில் இரண்டு அடி நீளமுடைய வாளுடன் நின்று கொண்டிருந்தார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மணிகண்டன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.