திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா கலைஞர் சிலைகளை திறந்து வைத்தார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொண்டர்கள் முக ஸ்டாலினுக்கு வீரவாள் பரிசளித்தனர். இதனையடுத்து ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் அந்த வாளை தூக்கி காட்டினார். இந்த புகைப்படத்தை திமுகவினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, “வாள் தூக்கி நின்றார் பாரு, வந்து சண்டை போட்ட எவரும் இல்லை” என்ற கர்ணன் பாடல் வரியை பதிவிட்டு வருகின்றனர்.
Categories