வாழமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்றாண்டார் கோவில் ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி தலைமை தாங்கிய இந்த கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பாண்டிச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நலதேவன், வெங்கடேசபிரபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேங்கடலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு “ஜல் ஜீவன் மிஷன்” திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது குறித்து விவாதித்து பேசினார்கள்.