இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லைகர். இந்த படத்தில் விஜய் தேவரை கொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கின்றார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்சளவில் உருவாகி இருக்கின்ற இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என பழமொழிகளில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் தோல்வியால் சமூக வலைதளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்க போவதாக தயாரிப்பாளரும் நடிகையுமான சார்மி அறிவித்துள்ளார். இது பற்றி அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கொஞ்சம் அமைதியாக இளைஞர்களை சமூக வலைதளத்தில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளப் போகின்றேன். எங்கள் பட நிறுவனத்தை மேலும் திடமாகவும் உயர்ந்த நிலையிலும் தயாராகிக் கொண்டு விரைவில் மீண்டும் திரும்பி வருவோம் அதுவரை வாழவிடு.. வாழு.. என பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
Categories