சேலம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து சேதமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலுக்கு மத்தியில் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி வட்டாரத்திலுள்ள பொட்டியாபுரம், தும்பிப்பாடி, சக்கரை செட்டிப்பட்டி மற்றும் டேனிஷ்பேட்டை ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது.
இதனால் சக்கரை செட்டிபட்டி பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணி என்பவரின் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரத்து 1500 க்கும் மேற்பட்ட வாழைகள் முற்றிலும் முறிந்து சேதமடைந்துள்ளது. இதனால் பல லட்சம் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.