வாழைத்தண்டு பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
தயிர் – 1 கப் கொத்தமல்லி தழை – நறுக்கியது
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
வாழைத்தண்டை வேக வைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிரை சேர்த்து நன்கு கலக்கி, அத்துடன் வேக வாய்த்த வாழைத்தண்டு 1/2 கப்,உப்பு(தேவைக்கேற்ப), நறுக்கிய கொத்தமல்லி தலை சேர்த்து கிளறி விடவும். அவ்ளோதான் வாழைத்தண்டு பச்சடி தயார். இதை பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க, சுவை அருமையாக இருக்கும்.
பலன்கள்
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குடலில் உள்ள கழிவைச் சுத்தப்படுத்தி வெளியேற்ற உதவும்.
உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பாதுகாக்கும். சிறுநீரகக் கல், பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு.
இது மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும்.