டி.ஜி.பி சைலேந்திரபாபு புகை பிடித்து கொண்டிருந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள டி. என் பாளையம் அருகில் இருக்கும் பெரிய கொடிவேரி அணை பகுதியில் டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு செட்டிபாளையத்தில் இருக்கும் டீக்கடையில் தேநீர் அருந்தியுள்ளார். இந்நிலையில் கடையிலிருந்து வாழைப்பழம் எடுத்து சாப்பிட்ட டி.ஜி.பி சைலேந்திரபாபு அங்கு சிலர் புகை பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
இதனால் அவர்களிடம் வாழைப்பழம் சாப்பிடுங்கள் உடல் நலத்திற்கு நல்லது என கூறியுள்ளார். மேலும் புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு செய்யும் என அறிவுரை வழங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.