Categories
உலக செய்திகள்

வாழைப்பழ கடைக்குள் சென்ற…. மர்ம நபர்கள் வெளியில் வந்த போது…. போலீசார் பொறி வைத்து பிடித்தும் பயனில்லை…!!

போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அதை எடுக்க வந்த நபர்களையும் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் பவேரியா மாநிலத்தில் உள்ள வாழைப்பழ கடை ஒன்றிற்குள் மர்ம நபர்கள் 7 பேர் நுழை  ந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த குறிப்பிட்ட வாழைப்பழ பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியேறிய போது அவர்களுக்குத் தெரியாமல் கண்காணித்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்னால் நடந்தது என்னவென்றால், போதைப் பொருள் கடத்தும் கும்பல் ஒன்று போதைப்பொருட்களை பெட்டியில் வைத்து அடைத்துள்ளனர். இதையடுத்து அந்த பெட்டிகளை வாழைப்பழ பெட்டிகளோடு சேர்த்து வைத்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தரக்கட்டுப்பாடு செய்யும் ஊழியர் பெட்டிகளை சோதனையிடும் போது அதில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள் பெட்டிகள் சிக்கியுள்ளது. இந்நிலையில் அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் போதைப் பொருள் அடங்கிய அந்தப் பெட்டிகளை எடுத்து விட்டு அதற்கு மாற்றாக வாழைப்பழ பெட்டிகளை வைத்துள்ளனர்.

மேலும் அதை யார் எடுக்க வருகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக பக்கத்தில் மறைந்து இருந்துள்ளனர். இந்நிலையில் திட்டமிட்டபடி அந்தப் பெட்டிகளை எடுப்பதற்காக மர்மநபர்கள் 7 பேர் வாழைப்பழ கடைக்குள் நுழைந்து உள்ளனர். அப்போதுதான் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். அந்த ஏழு பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார் மற்ற 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பெட்டியிலிருந்து போதை பொருளின் மதிப்பு சுமார் 50 மில்லியன் யூரோக்கள் ஆகும்.  இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த ஆறு நபர்கள் போதைப்பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சப்ளை செய்பவர்கள் மட்டுமே.

ஆகவே அதை அனுப்பியது யார்? அது யாருக்கு செல்கிறது? என்று தகவல் காவல்துறையினரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு 7 வருட ஜெயில் தண்டனையும், மற்ற நான்கு பேருக்கு 6 வருட ஜெயில் தண்டனையும்  விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |