வாழைப் பழத்தின் தோலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.
வாழைப்பழம் என்றால் யாருக்குதான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் வாழைப்பழத்தில் மிக நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் வாழைப்பழத் தோலில் உள்ள சத்துக்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது அதை தான் பார்க்க போகிறோம்.
உங்கள் கால்களில் முள் குத்தி இருந்தால் அதை எடுக்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்கள் கைவசம் வாழைப்பழத்தோல் மட்டும் இருந்தால் போதும் ஈசியாக முள்ளை வெளியே எடுக்க முடியும். முதலில் வாழைப்பழத் தோலை முள் குத்தி இருக்கும் இடத்தில் லேசாக தடவுங்கள். பிறகு அதை சுற்றி அழுத்தம் கொடுத்து எடுத்தால் எளிதில் வெளியே வந்துவிடும்.
சொரியாஸிஸ் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத் தோலை அந்த இடத்தில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மருக்கள் இருந்தால் அது சரும அழகை கெடுக்கும். இதைப் போக்க எளிய வழி வாழைப்பழத் தோலை மருக்கள் மீது தேயுங்கள். பின்னர் வாழைப்பழத் தோலின் மீது வைத்து ஒரு துணியால் கட்டி இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மக்கள் மாயமாய் மறைந்துவிடும்.
சரும அலர்ஜி உள்ளவர்கள், பூச்சிக்கடி உள்ளவர்கள் வாழைப்பழத் தோலை பிரிட்ஜில் வைத்து அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்குமிடத்தில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். முகப்பருவை போக்க வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப்பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடங்கள் செயல்படுகிறது.
இதனால் முகப்பருக்கள் குறையும் மஞ்சள் கரை இல்லாமல் வெண்மையான பற்களை பெறுவதற்கு, நீங்கள் வாழைப்பழத் தோலை எடுத்து தினமும் பல் விளக்கிய பின் காலை இரவில் உங்கள் பற்களை தேயுங்கள் உங்கள் பற்கள் மினுமினுக்கும்.