Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாழைப்பழ பணியாரம்… ருசியான ரெசிபி…!!

வாழைப்பழ பணியாரம் செய்ய  தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி                                 – அரை கப்
மைதா மாவு                                  – அரை கப்
வெல்லம்                                        – 1 கப்
பெரியவாழைப்பழம்                 – 2
ஏலக்காய்                                        – 3
தேங்காய் துருவல்                     – கால் கப்
இட்லி சோடா                               – ஒரு பின்ச்
எண்ணெய்                                     – தேவையான அளவு
பாதம் பொடித்தது                      – ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி                                    – அரை தேக்கரண்டி
உப்பு                                                   – ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் சிவப்பு அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு இரண்டு மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.பின்பு வாழைபழம், பாதாம் பருப்பை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும்.

பின்பு  ஊறிய சிவப்பு அரிசியை மிக்சிஜாரில் சேர்த்து நைசாக அரைத்து, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய், மைதாமாவை  சேர்த்துஅரைத்து,  இறுதியில் நறுக்கிய வாழைப்பழத்தை போட்டு   நன்கு அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில்சிறிது தண்ணீர் ஊற்றி,  வெல்லத்தை சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்கவிட்டு ஆறியதும் பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும்.

அதனையடுத்து அரைத்த மாவில், இட்லி சோடா, பொடித்த பாதம், சுக்குபொடி, தேங்காய் துருவல், வெல்ல கரைசலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இறுதியில், அடுப்பில் குழி பணியார சட்டியை வைத்து காயந்ததும், எண்ணெய் ஒரு துளி விட்டு, அதில் மாவை ஊற்றி, தீயின் தனலை மிதமாக வைத்து,ஊற்றிய மாவில் மூடிவைத்து, 3 நிமிடம் நன்கு வேக விடவும்.

பின்பு அதை மறுபுறம் திருப்பி விட்டு, மேலும் அதில் சிறிது எண்ணெய் விட்டு மூடி வைத்து  3 நிமிடம் வேகவிட்டு எடுத்தால்  சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் ரெடி.

Categories

Tech |