வாழை இலையில் சாப்பிடுவதால் அத்தனையொரு நன்மைகள் தெரியுமா.? நோய் இல்லாமல் வாழுங்கள்…
எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அப்படி நாம் தவறவிட்டு விஷியங்களில் ஒன்று தான் வாழை இலையில் சாப்பிடுவது.
வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாழைத்தண்டு சாறும், வாழையிலையின் சாறும் நல்லதொரு நச்சுகளை அழிக்கும் பொருளாககும்.
கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் அவர்கள் செய்வது வாழைத்தண்டின் சாற்றைத்தான் பயன்படுத்துவார்கள். திருமண பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பந்தலிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக்களிலும் வாழைமரம் தான்..
வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. என்றாவது நாம் இதை பற்றி யோசித்திருக்கிறோமா.? வாழை இலையில் தொடர்ந்து உணவு சாப்பிட்டு வந்தோம் என்றால் முகம் பொலிவுடன் இருக்கும். உடல் நலம் பெறும், மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும்.
பித்தமும் தணியும், வாழை இலையில் உள்ள நச்சுத்தன்மை உணவை ஜீரணம் செய்யும். வாழை இலையில் குளோரோபில் என்ற வேதிப்பொருள் உள்ளது, அது வயிற்று புண்ணையும் ஆற்றும் தன்மையுடையது. நன்கு பசி தூண்டும். வாழையில் சாப்பிட விரும்புபவர்கள் நோயின்றி நீண்ட நாட்கள் வாழ்வார்கள்.
அந்த காலத்தில் எல்லோரும் வாழை இலையில் தான் சாப்பிடுவார்கள், எவ்வளவு நாள் கொள்ளுப்பாட்டி ஆகுறவரைக்கும் எல்லாரும் உயிரோட இருந்தாங்க. ஆனா இன்று நாம் இவ்வாறு செய்கின்றோம், பிளாஸ்டிக் வாழை இலை கல்யாண வீட்டில் போடுகிறோம்.
நாம் பயன்படுத்திய பிறகும் வாழையிலை ஆடு , மாடு மாதிரி விலங்குகளுக்கும் பயன்படுகிறது. பின் இயற்கை உரமாகவும் மாறிவிடுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்றாக திகழ்கிறது..
விவசாயிகளை வாழ வைக்க இயற்கை வாழை இலையை பயன்படுத்துவோம்.