Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாழை தோட்டத்தில் பதுக்கிய பொருள்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளோடு பண்ணியோடு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்க தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 2 மூட்டைகளில் கடத்தியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அழகியபாண்டியபுரம் பகுதியில் வசிக்கும் குமார் மற்றும் ஜோஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஜோஸ் ஒரு வாழை தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதில் இருக்கும் அறையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று வாழைத்தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 14 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமார் மற்றும் ஜோஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |