திருமணநாளன்று சுந்தர்சியுடன் வாழ்ந்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் குஷ்பூ.
நடிகை குஷ்பு 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போதும் இவர் சினிமாவில் நடித்து வருகின்றார். நாடகங்களிலும் நடிக்கின்றார். மேலும் அரசியல்வாதியாகவும் இருக்கின்றார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர் இந்நிலையில் இவர்களது 22வது திருமண நாளை முன்னிட்டு குஷ்பூ.
இவர் தனது குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து கூறியுள்ளதாவது, “அங்கிருந்து இப்போது வரை என் வாழ்நாளில் பாதியை உங்களுடன் கழித்திருக்கின்றேன். இதற்கு மேல் எதுவும் கேட்டிருக்க முடியாது. மக்கள் எங்களுக்கு ஓராண்டு கொடுக்கவில்லை. இங்கே நாங்கள் 22வது திருமண நாளை கொண்டாடுகின்றோம். உங்களை காதலிக்கிறேன். உங்களுடனான வாழ்வு மகிழ்ச்சியானது. திருமணநாள் வாழ்த்துக்கள்… இன்னும் பல ஆண்டுகள் செல்ல வேண்டும்…” என்று பகிர்ந்திருந்துள்ளார்.