Categories
ஆன்மிகம் இந்து

வாழ்க்கையில் ஏற்படும் பெரிய பிரச்சனைகளுக்கு… இந்த சிறிய பரிகாரங்களை பண்ணுங்க… நல்லதே நடக்கும்…!!!

வாழ்க்கையில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சுலபமாக தீர்க்க சின்ன சின்ன வழிமுறைகள் அல்லது பரிகாரங்கள் இருக்கும். சில வழிமுறைகள் நம்முடைய பல பெரிய பிரச்சனைகளை தீர்க்கும். அப்படி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளுக்கான சிறிய பரிகாரங்கள் என்னென் என்பதை தெரிந்துகொள்வோம்.

பூர்வீக சொத்தில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்க, வீட்டு பூஜை அறையில் திருச்செந்தூர் முருகனை வைத்து, செவ்வாய்க்கிழமை தோறும் அரளிப்பூ சூட்டி பூஜை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அருகம்புல்லை கையில் எடுத்துக்கொண்டு செல்லும் எந்த ஒரு காரியத்திற்கு சென்றாலும் அந்த காரியம் நிச்சயம் வெற்றி பெரும்.

ஆண்கள், வராத கடனை வசூலிக்க சென்றால், அன்றைய தினம் சூரியன் உதிப்பதற்கு முன்பே கண்விழித்து சவரம் செய்துகொண்டு, கடனை வசூலிக்க செல்லவேண்டும். புதன்கிழமை அன்று இப்படி செய்வது மிகவும் சிறப்பு. கடன் நிச்சயம் வசூலாகும்.

புது வெள்ளை துணியை வாங்கி பன்னீரில் நனைத்து, காயவைத்து திரி போல் தயாரித்து விளக்கு ஏற்றினால் வீட்டிலிருக்கும் நெகடிவ் எனர்ஜி நீங்கும். வாழைத்தண்டு திரி போட்டு வீட்டில் தீபம் ஏற்ற, தெய்வ குற்றம் நீங்கும். குலதெய்வத்தின் கோபமும் குறையும்.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைத்து தெற்குப் பகுதியில் மண் விளக்கில், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மனமுருகி வேண்டிக்கொண்டால் எப்படிப்பட்ட தீராத கடனும் தீருவதற்கான வழி 6 வாரங்களில் தெரிந்துவிடும்.

துளசி செடியோடு சேர்த்து, அதே தொட்டியில் தொட்டா சிணுங்கி செடியையும் வளர்த்து வந்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் குறையும்.

Categories

Tech |