Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வாழ்க்கையில் பட்ட அவமானங்களையும் தாண்டி சாதித்துள்ளேன்”… பகிர்ந்த பிரபல நடிகை…!!!!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது வாழ்க்கையில் பட்ட அவமானங்கள் பற்றி கூறியுள்ளார்.

ஹலோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கல்யாணி பிரியதர்ஷன். சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த ஹீரோ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த இவருக்கு முதல் படமே வெற்றியைத் தந்தது. இத்திரைப்படத்தில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

அழகான நடிப்பு கவர்ச்சி காட்டாமல் இந்திய ரசிகர் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் சிறுவயதில் குண்டாக இருந்துள்ளார். குண்டாக இருந்ததால் பலர் இவரை கேலி செய்துள்ளனர். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் நான் மாடலாக போகிறேன் என கூறியதற்கு அனைவரும் இவரை கேலி செய்துள்ளார்கள். அந்த வரிகள்தான் உடல் எடையை குறைத்து தற்போது கதாநாயகியாகியுள்ளதாக தனது வாழ்க்கையில் பட்ட அவமானங்களையும் தாண்டி தற்போது சாதித் இருப்பதாக கல்யாணி பிரியதர்ஷன் கூறியுள்ளார்.

Categories

Tech |