Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

வாழ்க்கையில் பயத்தை வெல்லணுமா?…இந்த 9 வசனம் மிக முக்கியம்…!!

நீ பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன்! திகையாதே! நான் உன் தேவன்! நான் உன்னைப் பலப்படுத்தி, உனக்குச் சகாயம்பண்ணுவேன்! என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். (ஏசாயா 41. 10)

தேவன், நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல்: பலமும், அன்பும், தெளிந்த புத்தியுள்ள ஆவியை கொடுத்திருக்கிறார். (2 தீமோத்தி 1.7)

நான் கர்த்தரைத் தேடினேன்! அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லா பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார். (சங்கீதம் 34. 4)

மனுஷனுக்கு பயப்படும் பயம், கன்னியை வருவிக்கும். கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். (நீதிமொழிகள் 29. 25)

நீங்கள் ஒன்றுக்கும் கவலைபடாமல், எல்லாவற்றையும் குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். (பிலிப்பியர் 4.6)

தேவனை முன்னிட்டு, அவருடைய வார்த்தையில் புகழுவேன்! தேவனை நம்பியிருக்கிறேன்! நான் பயப்படேன்! மாமிசமானவன் எனக்கு என்ன செய்வான். (சங்கீதம் 86. 4)

இப்போது யாக்கோபே: உன்னை சிஷ்டித்தவரும் இஸ்ரவேலே, உன்னை உருவாக்கின வருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்! உன் பெயரைச் சொல்லி அழைத்தேன்! நீ என்னுடையவன்.

நீ தண்ணீரை கடக்கும்போதும், நான் உன்னோடு இருப்பேன். நீ ஆறுகளை கடக்கும் போதும் அவைகள் உன் மேல் புரளுவது இல்லை. நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய். அக்கினி ஜூவாலை உன் பேரில் பற்றாது.

பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன்! நான் உன் சந்ததியை, கிழக்கிலிருந்து வர பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டி சேர்ப்பேன். (எசாயா 43. 1,2,5)

Categories

Tech |