Categories
தேசிய செய்திகள்

வாழ்க்கையில கஷ்டம்…. அதான் இந்த பிளான்…. இளம்பெண்ணின் துணிச்சல்…!!!

பெண் ஒருவர் மூன்று மாதங்களில் மூன்று திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவை சேர்ந்த 27 வயது வயது பெண் தனது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய கணவரும் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் பணத்திற்காக மூன்று மாதங்களில் மூன்று நபரை திருமணம் செய்துள்ளார். முதலில் ஒருவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் அவருடன் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு அவருடைய  வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு வந்து விடுவார். இது தான் அவருடைய வழக்கம். இதேபோல மற்ற இரண்டு நபரையும் ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில் அந்தப் பெண் மூன்று நபர்களையும் திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவர் திருமணம் செய்த 3 நபரின் ஒருவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

 

Categories

Tech |