Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையே வெறுத்து போச்சு!…. வீட்டை விட்டு வெளியேறிய விவசாயி…. பின் நேர்ந்த சோகம்….!!

பழனியில்  விவசாயி  ஒருவர்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர்  மாவட்டத்தில்  உள்ள  கள்ளம்பாளையத்தில்   பழனிச்சாமி (வயது 58)  என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம்  செய்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதியன்று  குடும்ப பிரச்சினை காரணமாக  பழனிச்சாமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு  திரும்பவில்லை.

இந்த  நிலையில்  திண்டுக்கல்  மாவட்டத்தில்  உள்ள  பழனியை அடுத்த கல்துறை பகுதியில் பழனிச்சாமி தனியார் தோட்டம் ஒன்றில் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இந்த தற்கொலை குறித்து கீரனூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |