Categories
சினிமா தமிழ் சினிமா

“வாழ்க்கையை அழகாக்கிவிட்டாய் மை புருஷ்…..” விஜே மகாலட்சுமி உருக்கம்….!!!!

இரண்டு தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி தற்போது தனது கணவர் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கிய விஜே மகாலட்சுமி பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ர டெக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்தார் மகாலக்ஷ்மி.

திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்றனர். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மகாலட்சுமியும், ரவீந்திரளும் சென்னை மகாபாரத்தில் உள்ள ரெசார்ட்டில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்துள்ள மகாலட்சுமி கழுத்தில் மஞ்சள் கயிறுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு வாழ்க்கை அழகாக இருக்கிறது… அதை நீ தான் செய்தாய்… என் புருஷா… என உருக்கமாக பதிவிட்டுள்ளார் .மற்றொரு திருமண போட்டோவை ஷேர் செய்துள்ள மகாலட்சுமி “நீ என் இதயத்தை திருடி விட்டாய், அது உன்னிடமே இருக்க விட்டுவிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |