சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கிழக்கு வட்டம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி பழுது பார்க்கும் பட்டறையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு 15 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பிரபு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதன் பிறகும் மாணவியை மிரட்டி பிரபு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் பிரபுவை கைது செய்தனர். இதற்கிடையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கினை விசாரித்த சேலம் நீதிமன்றம் பிரபுவுக்கு ஆயுள் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.