Categories
உலக செய்திகள்

“வாழ்க்கையை புரட்டி போட்ட புயல்” பசியால் வாடும் குழந்தைகளுக்கு…. சாப்பாடு வாங்க…. மின்சார வயரில் நடந்த தந்தை….!!

தந்தை ஒருவர் தன் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி வருவதற்காக மின்சார வயரில் நடந்து சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வாம்கோ புயல் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அப்பகுதியின் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வீடுகள் மற்றும் தங்கள் உடைமைகளை இழந்தும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃபிலிப்பைன்ஸில் வாம்கோ புயலால் பாதித்த குடும்பம்: உணவுக்காக மின்சார வயர்களின் மீது நடந்து சென்ற குடும்பத் தலைவர்

சாப்பிட கூட உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பசியால் வாடும் தன்னுடைய குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சென்று உணவு வாங்கி வருவதற்காக தந்தை ஒருவர் மின்சார வயரின் மீது ஏறி நடந்து சென்றுள்ளார். இந்த புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மின்சார வயரை பிடித்துக்கொண்டு அவர் நடந்து சென்று சாப்பாடு வாங்க சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |