தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு, பிரஸ் மீட், பிறந்த வீட்டில் மறு வீடு மற்றும் கேரளா கோவிலில் வழிபாடு என பிஸியாக உள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு நயன்தாராவின் முதல் படம் ரிலீசாகி உள்ளது. இந்த படம் ட்ரீம் வாரியஸ் தயாரித்துள்ள டிடிஎஸ் ஹாட் ஸ்டோரில் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படத்திற்கும் தனது மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில்,”அற்புதமான திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள்…. எமோஷனல் அன்ட் எஃபெக்ட்டிவ்… உனக்கு வாழ்த்துக்கள் தங்கம்… என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் படத்தில் நயன்தாராவின் நடிப்பை பாராட்டி உள்ளனர். அதன்படி படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவி ஆக்டிங் சூப்பர் என்று பதிவிட்டுள்ளனர். ஆனால் மேக்கிங் கொஞ்சம் சுமார் என்று தெரிவித்துள்ளனர்.