Categories
அரசியல் தேசிய செய்திகள்

வாழ்த்துக்கள் மோடிஜி…! பசி, பட்டினியை ஒழித்ததற்கு…. மோடியை சாடிய கபில் சிபல்…!!!

உலக பட்டினி குறியீடு குறித்த அறிக்கையினை ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ளது. இதில் ஊட்டச்சத்து குறைபாடு, ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள்  சத்து குறைபாட்டால் உயரம் ஏற்ற உயரம், எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இந்தியாவானது மொத்தம் 107 நாடுகளுக்கான பட்டியலில், 94ஆவது இடத்தில் இருந்துள்ளது. ஆனால் தற்பொழுது 116 நாடுகள் இருந்த நிலையில் இந்தியாவானது 101 ஆவது இடத்தை பிடித்து பின் தங்கியுள்ளது. மேலும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபால் இவற்றை விட இந்தியாவில் அதிகமாக பசி பட்டினியால் வாடுபவர்கள் அதிகமாக இருப்பதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கடும் அதிர்ச்சி அலைகள் உருவாகி உள்ளது. இது  குறித்து அனைவரும் பாஜக அரசு தான் காரணம் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் மோடி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் பசி பட்டினி ஒழித்தது, இந்தியாவை உலக அளவில் பெரிய சக்தி ஆக மாற்றியது, டிஜிட்டல் பொருளாதாரம் என இந்தியாவை பல்வேறு வளர்ச்சி வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற மோடிஜிக்கு வாழ்த்துக்கள். இதனையடுத்து உலக பட்டினி குறியீட்டு அறிக்கையில் இந்தியா 2020 ஆம் ஆண்டு 94வது இடத்தில் இருந்து தற்பொழுது அதனை 120 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. பாகிஸ்தான், நேபால், வங்காளதேசத்தை விடவும் மிகவும் இந்தியா பின்னடைந்து உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |