வருகிற மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இன்று காலை 10 மணி அளவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் என் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை அதிமுக விற்கு நன்றி சொல்லிக் கொண்டிருப்பேன் எனவும் 2021 ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த சாமானியனும் முதலமைச்சராக முடியும் என தன்னை அடையாளப்படுத்திய அதிமுக இயக்கத்திற்கு வாழ்நாளின் கடைசி வரை நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன் என கூறியுள்ளார். கடைக்கோடியில் உள்ள விவசாய குடும்பத்தில் பிறந்த தன்னை உலகிற்கு அடையாளப்படுத்திய ஜெயலலிதாவின் வாக்குப்படி கழகத்தை கட்டிக் காப்போம் என அறிவித்துள்ளார்.
மேலும் தன்னை முதல்வர் வேட்பாளராக ஏகமனதாக அறிவித்த துணை முதலமைச்சர், தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பித்துள்ளார். கடந்த 5 ஆண்டு காலத்தில் அதிமுகவால் வெளியிடப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை குறிப்பிட்டுக் காட்டிய முதல்வர் கட்சியின் நலனுக்காக குருதியிலே உறுதி கலந்து உழைப்போம் எனவும் 2021 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் லட்சிய ஆட்சியை கோட்டையில் மீண்டும் படைப்போம் எனவும் சூளுரைத்துள்ளார்.